Saturday, November 01, 2008

462. ஈழத்தமிழர் பிரச்சினையும் நடிகர்கள் உண்ணாவிரதமும் - கி.அ.அ.அனானி

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து மடல், என்ன என்று பார்த்தால் மேட்டர் சுடச்சுட இன்று நடந்த (இலங்கைத் தமிழர் நலனுக்காக) திரையுலக உண்ணாவிரதப் போராட்டம் பற்றி ! கி.அ.அ.அ வின் finishing touch அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
************************************
ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் திரைப்பட நடிகர்கள்(தென்னிந்திய திறைப்பட நடிகர் சங்கம் சார்பாக) இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

அதை சன் தொலைக் காட்சி முழு நாளும் நேரடி ஒளிப்பதிவு செய்தது. முழுவதும் காணக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றாலும் அங்கங்கே பார்த்தவற்றிலிருந்து சில துணுக்குகள்

-நடிகர் சங்க வளாகத்துக்குள்ளாகவே உண்ணா விரதத்தை நடத்த முடிவு செய்து அதை திறம் பட நடத்தவும் செய்திருந்தார்கள் (நடிகர் சிவக்குமார் சொன்ன யோசனையின் பேரில் என்றார்கள்,(--always a sensible actor, Weldone Sivakumar).ராதாரவி திறம்பட காம்பையரிங் செய்து கொண்டிருந்தார்.

-முதலிலேயே அதிகம் controversial யான கருத்துக்களை பேச வேண்டாம் என்று சங்கத்தின் வாயிலாக சொல்லிவிட்டிருந்த படியால், அனைவருமே ஒரு வரம்புக்கள்தான் பேசினார்கள்.அதனால் யார் அதிக தமிழ் இன மான உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்பது போல் தொடங்கி போட்டி போட்டுக் கொண்டு உளரும் அபத்தங்கள்(பார்த்த வரை) குறைவாகவே இருந்தது.

-மன்சூர் அலிகான் எங்கு பேசினாலும்(ராமேஸ்வரத்திலும் கூட) பெண்கள் கற்பழிக்கப் படுவது பற்றியே பேசுவது coinsidense-ஆ அல்லது தனக்கு நன்கு பழக்கப் பட்ட subject-ஐ பேசுகிறார் என்று கொள்ளவேண்டுமா?

-விஜய் தனது லட்சோபலட்சம் ரசிகர்களையும் போர் நிருத்தத்தை வலியுருத்தச் சொல்லி பிரதமருக்கு தந்தி அடிக்கச் சொன்னார். பிறகு தனக்கு அத்தனை ரசிகர்கள் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ என் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் தந்தியடிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார்- கலைஞர் சொன்ன போது நீங்க போஸ்ட் ஆபிஸ் போய் தந்தி அடிச்சீங்களா விஜய் ?

-சத்தியராஜ் ஈழத்தில் தமிழர்கள் சாவது குண்டு மழையால் இல்லை, மூப்பினாலும்,கேன்சரினாலும் என்று எதிர்மறையாக காமெடி செய்து பொருள் விளங்க வைக்க முயன்று தோற்றுப் போனது பரிதாபமாக இருந்தது. உணர்ச்சிகளைக் கொட்டும் போது கொஞ்சம் அப்படி இப்படி எல்லை மீறத்தான் செய்யும் என்று கைதான இயக்குனர்களுக்கு வக்காலத்து வாங்கியவரை " உணர்ச்சிகளை கட்டுப் படுத்துபவன்தான் மனிதன்" என்று ரஜினிகாந்த் பேசும்போது போகிற போக்கில் மறைமுகமாக குட்டியது.. பாவம் புரிந்ததோ புரியவில்லையோ?

-ரஜினி " ஒரு நாட்டில் பொது ஜனங்களை கஷ்டப் படுத்தினால்,ஏழை எளிய மக்கள் கண்ணீர் விட்டால், அவர்களது பெருமூச்சில் அந்த நாடு உருப்படாமல் போகும்" என்று சொல்லும் போது அவர் ஈழத்தமிழர் நிலை குறித்து சொல்கிறாரா அல்லது தமிழகத்தில் விலைவாசி மின்வெட்டு போன்றவற்றால் அவதிப் படும் தமிழனின் பெருமூச்சு பற்றி "கடவுளாலும் காப்பாற்ற முடியாது " போல வாயிஸ் கொடுக்கிறாரா என அனைவரும் ஒரு நிமிடம் திகிலுடன் பார்த்தது நிஜம்.

- எஸ் ஜே சூரியா பேசும் போது ஈழத் தமிழர்களையெல்லாம் தமிழ் நாட்டில் குடியமர்த்தி விடலாம் என யோசனை சொன்னார் - (இவ்வளவு அப்பாவியா நீங்க எஸ் ஜே சூர்யா இல்லைனா தமிழனை வச்சு கமெடி கீமெடி ஏதும் பண்ணுறீங்களா?)

- தல "அஜித்" எப்படா பேசக் கூப்பிடுவார்கள் என்பது போலக் காத்திருந்து " எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்கள்' என ஒற்றை வரியில் பன்ச் வைத்து விட்டு உட்கார்ந்தார்- வேணுங்குற எடத்துல பேச மாட்டிங்கிறீங்க, வேண்டாத எடத்துல வாயக் குடுத்து மாட்டிக்கிறீங்களே,தல ?

-திருமாவளவன் பேசும் போது, இலங்கையில் தமிழர்கள் பூர்வ குடிகள், சிங்களவர்கள்தான் (ஒரிசாவிலிருந்து) வந்த வந்தேரிகள். மேலும் இந்தியா தமிழர்களை பாதுகாக்க வேண்டும் ஏனெனில் "தமிழர்கள் அனைவரும் இந்துக்கள்" என்று சொன்னார்(இது சொன்னது திருமாதானா வேறு யாராவதா என எனக்கு ஒரு சதவிகித டவுட் உள்ளது, யாராவது கன்ஃபார்ம் பண்ணினால் தேவலை)- அப்படியா திருமா? தமிழ் வலயுலகுல நிறையப்பேர் அப்படி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க,அதுனால கூடிய சீக்கிரம் உங்களுக்கும் "வந்தேறி"ப் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.

-கமல் பேசும் போது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் ,உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என வார்த்தை ஜாலம் காட்டினார். பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் பழ.நெடுமாறன் மேடைக்கு வந்ததால் பேச்சை நிறுத்தியவர்" நான் பேச்சை நிறுத்தியது கேட்பவர் கவனம் சிதரியதென்பதற்காக அல்ல, பெரியவர் நெடுமாறனுக்கு உரிய மரியாதை வணக்கம் செய்ய வேண்டுமே என்பதற்காத்தான் என்று சமாளித்தார். நிவாரணத்திற்கு ஐந்து லட்சம் அறிவித்தவர் வீட்டுக்குப் போய் அனுப்புவதாக சொன்னார் :)

இதெல்லாம் தவிர

-வழக்கம் போல் சன் டீவி ஃபுல் கவரேஜ் கொடுத்து அட்வர்டைஸ்மெண்டுகளுடன் நிகழ்ச்சியை ஒளிபரப்பி தன் கலெக்'சன்'னை பார்த்துக் கொண்டது.

-வழக்கம் போல் தமிழ் மகா சனங்கள் திரை நட்சத்திரங்களைக் காண கூட்டமாக வந்து "திருப்பதி சாமி தரிசனம்" செய்வது போல் முண்டியடித்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.

-வழக்கம் போல் முன்னணி நடிகையர் அலங்காரமாக வந்து சும்மா உட்கார்ந்து ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியெல்லாம் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

-வழக்கம் போல் இன்றும் சிங்கள ராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தியது

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

இன்று சோ அவர்களும், மௌலி அவர்களும் விஜய் டிவியின் "காபி வித் அனு" நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கலக்கு கலக்கினார்கள். அது குறித்து எனது பதிவு நாளை காலை !!!

இலவசக்கொத்தனார் said...

//வழக்கம் போல் இன்றும் சிங்கள ராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தியது//

:(

said...

வலையுலகில் உலா வரும் தமிழக முதல்வரின் தொண்டரடிப்பொடி 'நடுநிலை' பதிவொன்று இட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்...
http://www.luckylookonline.com/2008/11/blog-post.html
அதை சீரியஸாக எடுத்துக் கொண்ட மற்றொரு பதிவரின் காமெடி பதிவு
http://velanvelan.blogspot.com/2008/11/blog-post.html

said...

//அதுனால கூடிய சீக்கிரம் உங்களுக்கும் "வந்தேறி"ப் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.//

டெக்னிக்கலி அவருக்கு பார்ப்பன 'அடிவருடி' இல்லைன்னா 'கொட்டைதாங்கி' பட்டம்தான் கொடுக்க முடியும்.

Udhayakumar said...

//வலையுலகில் உலா வரும் தமிழக முதல்வரின் தொண்டரடிப்பொடி 'நடுநிலை' பதிவொன்று இட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்...
http://www.luckylookonline.com/2008/11/blog-post.html
அதை சீரியஸாக எடுத்துக் கொண்ட மற்றொரு பதிவரின் காமெடி பதிவு
http://velanvelan.blogspot.com/2008/11/blog-post.html//

எப்பவுமே பேத்தனமா (சோத்தனமா இல்லீங்கண்ணா) பேசிட்டே இருக்கணுமா கி.அ.அ.அனானி. இல்லை வெறும் அனானியா?

said...

//-வழக்கம் போல் இன்றும் சிங்கள ராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தியது//

:(

பினாத்தல் சுரேஷ் said...

கி அ அ அ அ வோட ஸ்டைல் கொஞ்சம் கொறச்சலாவும் ரிப்போர்ட்டிங் அதிகமாவும் இருக்கே!

dondu(#11168674346665545885) said...

//இன்று சோ அவர்களும், மௌலி அவர்களும் விஜய் டிவியின் "காபி வித் அனு" நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கலக்கு கலக்கினார்கள். அது குறித்து எனது பதிவு நாளை காலை !!!//

அதைச் செய்யுங்கள் சீக்கிரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
இந்தப் பதிவு குறித்து உங்க கருத்து தான் தேவை மக்களுக்கு ;-)

said...

//எப்பவுமே பேத்தனமா (சோத்தனமா இல்லீங்கண்ணா) பேசிட்டே இருக்கணுமா கி.அ.அ.அனானி. இல்லை வெறும் அனானியா?
///

எல்லா அனானியும் நானில்லை உதயகுமார் தம்பி. நீங்க குறிப்பிட்டிருக்குற கமென்ட் என்னுதுல்ல. இப்படி பேயடிச்சாப்புல யோசிச்சுக்கிட்டு அலஞ்சா அப்படியே பின்னாடி போயி க்ராண்ட் கன்யானுல கவுந்தடிச்சிறப் போறீங்க..பாத்து :))

கி அ அ அனானி

said...

பாலாஜி சார்

நன்றி பதிப்பித்தமைக்கு.

இலவசக்கொத்தனார், தூயா
கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
இதுதான் நிதர்சனம் :(

கி அ அ அனானி

said...

///கி அ அ அ அ வோட ஸ்டைல் கொஞ்சம் கொறச்சலாவும் ரிப்போர்ட்டிங் அதிகமாவும் இருக்கே!///

பினாத்தல் சுரேஷ்,

இது ஒரு ரிபோர்ட்டிங் பதிவு மட்டுமே.நம்ம இடைச் செருகல் சும்மா ஊறுகாய் மாதிரி.

கி அ அ அனானி

கிரி said...

//யார் அதிக தமிழ் இன மான உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்பது போல் தொடங்கி போட்டி போட்டுக் கொண்டு உளரும் அபத்தங்கள்(பார்த்த வரை) குறைவாகவே இருந்தது.//

:-))))))

நல்லா சுவாசியமா இருந்தது உங்க பதிவு :-)

Udhayakumar said...

//எல்லா அனானியும் நானில்லை உதயகுமார் தம்பி. நீங்க குறிப்பிட்டிருக்குற கமென்ட் என்னுதுல்ல. இப்படி பேயடிச்சாப்புல யோசிச்சுக்கிட்டு அலஞ்சா அப்படியே பின்னாடி போயி க்ராண்ட் கன்யானுல கவுந்தடிச்சிறப் போறீங்க..பாத்து :))

கி அ அ அனானி//

பேயெல்லாம் அடிக்காது அனானி. நானும் GCTianதான்.

said...

///கிரி said...

:-))))))

நல்லா சுவாசியமா இருந்தது உங்க பதிவு :-)////

நன்றி கிரி. வேகமா தட்டச்சும் போது "ர" குறைந்து போய் விட்டதுன்னு நினைக்கிறேன் :)

கி அ அ அனானி

said...

///Udhayakumar said...

பேயெல்லாம் அடிக்காது அனானி. நானும் GCTianதான்.////

முன் முடிவோடதான் எழுதுறீங்க. எ அ பாலாதான் GCTian + இந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர். நான் இரண்டும் இல்லை.

கி அ அ அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails